/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு தலைமை மருத்துவமனையில் போராட்டம் நடத்திய நோயாளிகள்
/
அரசு தலைமை மருத்துவமனையில் போராட்டம் நடத்திய நோயாளிகள்
அரசு தலைமை மருத்துவமனையில் போராட்டம் நடத்திய நோயாளிகள்
அரசு தலைமை மருத்துவமனையில் போராட்டம் நடத்திய நோயாளிகள்
ADDED : நவ 15, 2024 06:40 AM

பரமக்குடி: பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டத்தால் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு செய்த நிலையில் நோயாளிகள் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியதால் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர் சங்கம் சார்பில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று காலை பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு செய்தனர். இந்த மருத்துவமனையில் ஏற்கனவே டாக்டர்கள் பற்றாக்குறையால் 7 பேர் மட்டுமே பணியில் உள்ள நிலையில் நேற்று குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் என ஏராளமான வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தனர். ஆனால் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு செய்த நிலையில் ஓ.பி., சீட்டு வழங்கப்பட்டது.
இதையடுத்து காலை 7:00 மணி முதல் காத்திருந்த நோயாளிகள் 10:00 மணிக்கு ரோட்டில் இறங்கி போராட போவதாக தெரிவித்தனர். இதனால் டவுன் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைமை டாக்டர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 5 டாக்டர்கள் பணி செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் பரபரப்புக்கு இடையே போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் அங்கிருந்த மருத்துவக் கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் பணிகளை தொடர்ந்து புறக்கணித்தனர். இதே போல் பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் நேற்று சிகிச்சை நடக்கவில்லை.