/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் அவதி: தேங்கியுள்ள கழிவு நீரால் சுகாதாரக்கேடு

ADDED : ஏப் 21, 2025 05:42 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் திடக்கழிவு மேலாண்மை பெயரளவில் உள்ளதால், கழிவு நீர் வெளியேறி மக்கள் நடமாடும் பகுதியில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய்பரப்பும் மையமாக செயல்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புதிய கட்டடத்தில் செயல்படுகிறது. இருப்பினும் பழைய கட்டடத்தில் அவசர வார்டு மூன்று தளங்களை கொண்டது. இங்கு காச நோய் வார்டு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, ஸ்கேன் மையம், ரத்ததான மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இயங்கி வருகின்றன. உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான நோயாளிகள், பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் முறையான வசதியிருந்தும் பராமரிப்பு செய்யப்படாததால் கழிவு நீர் வெளியேறி வருகிறது. இந்த கழிவு நீர் முன்னாள் புறக்காவல் நிலைய கட்டடம் பகுதியில் தேங்கியுள்ளது. அங்கிருந்து காச நோய் சிகிச்சைக்கு நோயாளிகள் செல்லும் வழியில் கழிவு நீர் பரவியிருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நோய் பரப்பும் நிலையமாக செயல்பட்டு வருகிறது என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் கழிவு நீர் வெளியேறாமல் முறையாக பராமரிப்பு செய்திட அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்டநிர்வாகம் உத்தரவிட வேண்டும்.-----------