ADDED : மே 21, 2026 04:14 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரெகுநாதபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் மகப்பேறு, பொது மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன.
இந்த மருத்துவமனையின் இருபுறமும் குப்பை கொட்டப்படுகின்றன. அவற்றில் அவ்வப்போது தீ வைப்பதால் அப்பகுதியை சுற்றிலும் புகை சூழ்ந்துள்ளது. மருத்துவமனைக்குள் புகை வருவதால் நோயாளிகள் அவதியடைகின்றனர். குப்பை கொட்டுவதையும், எரிப்பதையும் தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
