/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க நோயாளிகள் காத்திருப்பு

ADDED : அக் 07, 2024 04:59 AM
ராமநாதபுரம்: முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுப்பதற்கு ஒப்புதலுக்காக வாரக்கணக்கில் காத்திருக்கும் நோயாளிகள்அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. டாக்டர்களால் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க நோயாளிகள் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
இந்த ஸ்கேன் எடுக்க முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் செயல்படுத்த உரிய அனுமதி பெற்ற பிறகே ஸ்கேன் எடுக்கப்படும். அனுமதி பெற்றால் மட்டுமே காப்பீட்டு திட்டத்தில் ஸ்கேன் எடுப்பதற்கான கட்டணத்தை அனுமதிக்க முடியும்.
அவசரத்திற்கு வரும் நோயாளிகள் உரிய அனுமதி பெறுவதற்காக வார கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது.
அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க முடியாதததால் உரிய சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுப்பதற்கு கால தாமதம் செய்யாமல் உரிய அனுமதி வழங்க அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமைன நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஸ்கேன் எடுப்பதை எளிமைப்படுத்த வேண்டும். நோயாளிகள் காத்திருக்காமல் உடனுக்குடன் ஸ்கேன் எடுக்க முதல்வர் காப்பீட்டு திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.