ADDED : டிச 20, 2024 02:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை டி.எஸ்.பி., அலுவலகத்தில் பெட்டிசன் மேளா நடந்தது. டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமை வகித்தார். திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தீர்வு காணப்படாத மனுக்கள் மீது விசாரணை செய்யபட்டது.
பொதுமக்களிடமிருந்து 20க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி., உத்தரவிட்டார். சில மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.