/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பலமுறை மனு அளித்தும் பட்டா தரல கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
/
பலமுறை மனு அளித்தும் பட்டா தரல கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
பலமுறை மனு அளித்தும் பட்டா தரல கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
பலமுறை மனு அளித்தும் பட்டா தரல கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : மார் 08, 2024 12:32 PM

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பாரனுார் குரூப் தென்கரை கொல்லுப்பட்டறை பகுதியைச் சேர்ந்த மக்கள் இலவசவீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கலெக்டர் அலுவலகத்தில்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயத் தொழிலாளர்கள் சங்க செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். பாரனுார் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. வாடகை வீட்டில் குடியிருக்கும் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும்அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து பட்டா வழங்க உறுதி அளிக்கும் வரை போகமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்கள் கோரிக்கை மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.