/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திரவுபதி அம்மன் கோயில் விழாவில் பட்டாபிஷேகம்
/
திரவுபதி அம்மன் கோயில் விழாவில் பட்டாபிஷேகம்
ADDED : ஆக 20, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா, ஜூலை 25ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வாக, சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி திருக்கல்யாணம், சக்ராபர்ண கோட்டை, சுபத்திரை கல்யாணம், அபிமன்யு பிறப்பு, தவசு கடப்பலி, படுகளம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று, முக்கிய விழாவான பூக்குழி விழா ஆக.15-ல் நடந்தது.
விழாவின் கடைசிநாளான நேற்று மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.