தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அமைதி வழியில் போராட்டம்

 அமைதி வழியில் போராட்டம்

 அமைதி வழியில் போராட்டம்


ADDED : ஜன 23, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி: கமுதி மத்திய கூட்டுறவு வங்கி முன் காவிரி -வைகை - கிருதுமால் -குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அமைதியான வழியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டத்திற்கு மண்டல தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் மலைச்சாமி, நகர் செயலாளர் ஜோதிராஜ் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 2024--25ம் ஆண்டு பயிர்கடன் பெற்று திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க கால தாமதம் செய்யாமல் உடனே வழங்கவும், கமுதி வட்டாரத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் நெல், பருத்தி, உளுந்து, சோளம், கம்பு போன்ற பயிர்கள் போதிய மழையின்மையால் உரிய விளைச்சல் இல்லை.

எனவே ராமநாத புரம் மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை, வருவாய்த்துறை, காப்பீட்டு நிறுவனம், புள்ளியியல் துறை என அனைத்து துறை அதிகாரிகளும் கள ஆய்வு செய்து பாதிப் படைந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையும், நிவாரணமும் வழங்கவும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.,28ல் கமுதி பஸ் ஸ்டாண்டில் அமைதி வழியில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

உடன் மோகன்தாஸ், பெருமாள் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us