/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் மயில்களுக்கு ஆபத்து
/
ராமநாதபுரத்தில் மயில்களுக்கு ஆபத்து
ADDED : ஏப் 10, 2025 05:42 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் சில சமூக விரோதிகள் தோகைக்காக தாக்குவதாக புகார் எழுந்துள்ளது. இவற்றை பாதுகாக்க வனத்துறையினர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ராமநாதபுரத்தில் வயல்வெளியில், கரட்டுப்பகுதியில் ஏராளமான மயில்கள் வாழ்கின்றன. அப்பகுதியில் புழு, பூச்சி, சிறுதானியங்களை உணவாக உட்கொள்கின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் விவசாயப்பணிகள் குறைந்துள்ளது.
போதிய உணவு கிடைக்காத காரணத்தால் நகர் அருகேயுள்ள பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சூரன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவை கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாகவும், தனியாகவும் உலா வருகின்றன.
அழகிய தோகைக்காக மயிலை சிலர் தாக்குவதாக புகார் எழுந்துள்ளது. ஆகையால் ராமநாதபுரத்தில் தேசியப்பறவையான மயிலை பாதுகாக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வனத்துறை முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.