/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் கருகிய கடலை செடி
/
மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் கருகிய கடலை செடி
மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் கருகிய கடலை செடி
மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் கருகிய கடலை செடி
ADDED : ஜூன் 10, 2025 12:58 AM

கமுதி: கமுதி அருகே காக்குடி கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் விவசாயத்திற்கு பயன்படுத்தும் போர்வெல்லை பயன்படுத்த முடியாததால் கடலை செடிகள் கருகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கமுதி அருகே காக்குடி, வல்லந்தை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் கடலை விவசாயம் செய்கின்றனர்.
போர்வெல் அமைத்து கடலைச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இந்நிலையில் காக்குடி கிராமத்தில் இலவச மின்சாரத்திற்காக கடந்த சில மாதத்திற்கு முன்பு 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் நடப்பட்டு இலவச மின்சப்ளை வழங்கப்பட்டு அதன் மூலம் போர்வெல் தண்ணீரை கடலை விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.
தற்போது மின்கம்பங்கள் சாய்ந்து உயரழுத்த மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. காக்குடியில் பயிரிடப்பட்டுள்ள கடலை செடிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாததால் கருகியது. இதனால் ஏக்கருக்கு 70 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்தும் எந்த பயனும் இல்லை.
மின்வாரிய அதிகாரிஅலட்சியத்தால் கடலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்து போர்வெல் பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் துறை அதிகாரிகள் கிராமத்தில் ஆய்வு செய்து கடலை விவசாயத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.