ADDED : மார் 15, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானையில் பொதுஇடங்களில் புகைபிடித்தவர்களுக்கு அபராதம் விதிக்கபட்டது.திருவாடானை வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், புகையிலை தடுப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர்.
புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். புகையிலை, அதனைச்சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு புகையிலை தடுப்பு சட்ட விதிகள் குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கினர்.
பொது இடங்களில் புகைபிடித்த ஐந்து பேருக்கு தலா ரூ.100ம், போதை புகையிலை விற்ற கடை உரிமையாளர்கள் மூன்று பேருக்கு தலா ரூ.200ம் அபராதம் விதித்தனர்.

