/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அமைப்பு சாரா நல வாரிய தொழிலாளர்களுக்கு.. ஓய்வூதியம் தாமதம்; ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் பலனில்லை

ADDED : நவ 13, 2024 05:03 AM
பரமக்குடி: ராமநாதபுரத்தில் செயல்படும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் ஓய்வூதியம் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் கைத்தறி நெசவு, தையல் உள்ளிட்ட உடல் உழைப்பு தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு அனைத்து வகையான உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் 60 வயது பூர்த்தி அடைந்த நிலையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு மாதமும் ரூ.1200 அவர்களின் வங்கி கணக்கில் தவறாமல் செலுத்தப்படும்.
இதற்காக நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் உரிய சான்றிதழ்களை ஆன்லைனில் சமர்ப்பித்து விண்ணப்பிக்கின்றனர். இதன்படி ஜூன் மாதம் முதல் பதிவு செய்த பலருக்கு அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்படாமல் உள்ளது. மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு விண்ணப்பித்த தேதிகளின் அடிப்படையில் சரிபார்ப்பு செய்யப்படுவதில்லை. தொடர்ந்து முன்னுக்குப் பின் பதிவு செய்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே நல வாரியத்தில் ஓய்வு வயது 60 எட்டிய அனைத்து விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கும் உடனுக்குடன் ஆவணங்களை சரி பார்த்து ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நலவாரிய உதவி ஆணையர் குலசேகரன் கூறுகையில்,
ஒரு சிலரின் விண்ணப்பங்களில் முறையாக எழுதி சமர்ப்பிக்காமல் இருப்பதுடன், கைத்தறி அலுவலகங்களில் சரிபார்ப்பு மேற்கொள்ள தாமதம் உண்டாகிறது. வரும் நாட்களில் இது சரி செய்யப்படும் என்றார்.