ADDED : மார் 05, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
கடலாடி: -: ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கடலாடி வட்டாரத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சிவனுபூவன் முன்னிலை வகித்தார். தலைவராக ராமநாதன், செயலாளராக முருகன், பொருளாளராக ராஜேந்திரன், துணைத்தலைவராக நவநீத கிருஷ்ணன், இணைச் செயலாளர் நாகலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நக்கீரன், வடிவேலு புதிய நிர்வாகிகள் தேர்வாகினர்.
மாவட்ட பொருளாளர் முருகேசன், செயலாளர் விஜயராகவன், வட்டச் செயலாளர் முருகன் பங்கேற்றனர்.
