ADDED : ஜன 28, 2026 05:25 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் விஜயராகவன், வட்ட துணைத்தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் காஜா நஜிமுதீன் வரவேற்றார்.
70 வயது முடிந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி செயலாளர் ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி அனைத்து ஓய்வூதியர்களுக்கும் முழுமையான சிகிச்சை தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடன் துரைப்பாண்டியன், ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
