UPDATED : ஜூன் 27, 2026 06:41 PM
ADDED : ஜூன் 27, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் அகில இந்திய அஞ்சல் ஒய்வூதியர் சங்கத்தினர் 10 ம் ஆண்டு மாநாடு தொடக்க விழா நடந்தது.
மாவட்ட தலைவர் நாகநாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் ஹாஜி முகமது இஸ்ஸதீன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பற்குணம் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தலைமை அஞ்சலகத்தில் ஓய்வூதியர் சங்கத்திற்கு இடம் ஒதுக்குவது, பஞ்சப்படி, மெடிக்கல் அலவன்ஸ் வழங்குவது, எட்டாவது ஊதியக்குழு அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
