ADDED : டிச 19, 2025 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சித்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர் சிவனுபூவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, நிலுவை இனங்கள், புகார் மனுக்களின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை புகாரை விரைந்து முடிக்க வேண்டும்.
ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

