ADDED : பிப் 19, 2026 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் நாகநாராயணன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
எட்டாவது ஊதியக்குழு அமைத்து புதிய பென்ஷன் கிடைக்க வேண்டும். பஞ்சப்படி 18 சதவீதத்தை வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டம் தொடர வேண்டும். மெடிக்கல் அலவன்ஸ் ரூ.5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது என்றார். சங்க செயலாளர் முஹம்மது இஸ்ஸதீன், பொருளாளர் பற்குணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

