/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயில் கட்டண சலுகை வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
/
ரயில் கட்டண சலுகை வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
ரயில் கட்டண சலுகை வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
ரயில் கட்டண சலுகை வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 16, 2025 04:03 AM
ராமநாதபுரம்: மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என அனைத்து ஓய்வூதியர்கள், மூத்த குடிமக்கள் நலச் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட அனைத்து ஓய்வூதியர்கள், மூத்த குடிமக்கள் நலச் சங்கத்தின் 32வது ஆண்டு பொதுக்குழுகூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமசந்திரன் தலைமை வகித்தார். உயிரிழந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் நாகரத்தினம் ஆண்டறிக்கை, சங்க செயல்பாடுகளை தெரிவித்தார். பொருளாளர் முருகேசன் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர் மறைவுக்கு பின் அவரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்குவதை ரூ.2.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு 65, 70, 75, 80 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 5 சதவீதம், 10 சதவீதம் 15 சதவீதம், 20 சதவீதம் முறையே கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மூத்த குடிமக்கள், ஓய்வூதியர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சீதாலெட்சுமி, ஆலோசகர் ஜேசுராஜ் பங்கேற்றனர்.