/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிக்கல் கிராமத்திற்கு குடிநீர் வராமல் மக்கள் பாதிப்பு
/
சிக்கல் கிராமத்திற்கு குடிநீர் வராமல் மக்கள் பாதிப்பு
சிக்கல் கிராமத்திற்கு குடிநீர் வராமல் மக்கள் பாதிப்பு
சிக்கல் கிராமத்திற்கு குடிநீர் வராமல் மக்கள் பாதிப்பு
ADDED : டிச 28, 2024 07:50 AM
சிக்கல் : சிக்கல் ஊராட்சியில் காவிரி குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியபட்டி, பொட்டல்பச்சேரி, மேலச்சிக்கல், கிழக்கு காலனி, கழநீர் மங்கலம் பகுதிகளில் காவிரி குடிநீர் முறையாக கிடைப்பதில்லை. இதனால் குடம் தண்ணீர் ரூ.12க்கு விலைக்கு வாங்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பா.ஜ., கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: மற்ற ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டம் நடைமுறைக்கு வருவதை போன்று, சிக்கல் ஊராட்சிக்கும் ஜல்ஜீவன் திட்டம் முறையாக அமல்படுத்த வேண்டும். கடலாடி யூனியன் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ள கிராமங்களை கண்டறிந்து தினசரி குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.