/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்காக அமைத்த உழவர் சந்தையில் கழிவுநீர் தவிக்கும் மக்கள், விவசாயிகள்
/
விவசாயிகளுக்காக அமைத்த உழவர் சந்தையில் கழிவுநீர் தவிக்கும் மக்கள், விவசாயிகள்
விவசாயிகளுக்காக அமைத்த உழவர் சந்தையில் கழிவுநீர் தவிக்கும் மக்கள், விவசாயிகள்
விவசாயிகளுக்காக அமைத்த உழவர் சந்தையில் கழிவுநீர் தவிக்கும் மக்கள், விவசாயிகள்
ADDED : டிச 18, 2024 07:52 AM

பரமக்குடி : பரமக்குடி உழவர் சந்தையில் கழிவுநீர் தேங்கி சகதிக் காடாகி உள்ளதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பு, ஆஸ்பத்திரி ரோடு பகுதியில் உழவர் சந்தை செயல்படுகிறது.10 ஆண்டுகளுக்கு முன்பு இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் நேரடியாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி 70-க்கும் மேற்பட்ட கடைகள் பரமக்குடி உழவர் சந்தையில் உள்ளன. இங்கு உழவர்களுக்கு அட்டை வழங்கப்பட்டு தினசரி குலுக்கள் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படும்.
ஆனால் விவசாயிகள் பலரும் மாற்று நபர்களுக்கு அட்டைகளை வழங்கி வியாபாரம் செய்து தருவதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் சந்தை வளாகம் முழுவதும் மழை நேரங்களில் கழிவுநீர் தேங்கி மாதக்கணக்கில் அகற்றப்படாத நிலை உள்ளது.
இதனால் சந்தைகளில் கடை வைக்க வேண்டியவர்கள் தெருவோரங்களை நாடும் நிலை ஏற்படுகிறது. மேலும் சந்தைக்கு வெளியில் கடை விரிக்க அனுமதி இல்லாத சூழலில் தெருவோர கடைகள் அதிகரித்துள்ளன.
ஆனால் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் உள்ளனர். இதனால் முறையாக உழவர் சந்தையில் விற்பனை செய்யும் உழவர்களுக்கு வியாபாரம் குறைந்து நஷ்டமடையும் சூழல் இருக்கிறது. தொடர்ந்து நாள் முழுவதும் ரோட்டில் நெரிசல் ஏற்படும் நிலையும் அதிகரித்துள்ளது.
எனவே சந்தை வளாகத்தை சீரமைத்து தொற்று நோய் பீதியில் இருந்து மீட்பதுடன், உழவர் சந்தையை முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.