/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அலைபேசி டவர் இருந்தும் சிக்னல் கிடைக்காததால் மக்கள் பாதிப்பு
/
அலைபேசி டவர் இருந்தும் சிக்னல் கிடைக்காததால் மக்கள் பாதிப்பு
அலைபேசி டவர் இருந்தும் சிக்னல் கிடைக்காததால் மக்கள் பாதிப்பு
அலைபேசி டவர் இருந்தும் சிக்னல் கிடைக்காததால் மக்கள் பாதிப்பு
ADDED : மே 21, 2025 11:54 PM
தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் அலைபேசி டவர் அமைக்கப்பட்டும் சிக்னல் கிடைக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் தனியார் அலைபேசி டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் சிக்னல் கிடைக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முன்னாள் மாணவர்கள் சேவை மையத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் தங்கி பணியாற்றுகின்றனர். மூன்று தனியார் அலைபேசி டவர்கள் அமைக்கப்பட்டும் சிக்னல் கிடைக்காததால் குடும்பத்தார்கள் அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்சை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. சம்பந்தபட்ட நிர்வாகத்தினர் சிக்னல் கிடைக்கும் வகையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.