/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டில் உலாவரும் கால்நடைகள் மக்கள் அச்சம் : விபத்து அபாயம்
/
ரோட்டில் உலாவரும் கால்நடைகள் மக்கள் அச்சம் : விபத்து அபாயம்
ரோட்டில் உலாவரும் கால்நடைகள் மக்கள் அச்சம் : விபத்து அபாயம்
ரோட்டில் உலாவரும் கால்நடைகள் மக்கள் அச்சம் : விபத்து அபாயம்
ADDED : மே 16, 2025 02:59 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள், ஆடுகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் பேரூராட்சி காந்தி சிலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட், பஜார் தெரு, அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், ஆற்றுப்பாலம் வரை 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ரோட்டோரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் அவிழ்த்து விடப்படுவதால் ரோட்டில் சுற்றித் திரிகின்றன. வாகனங்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வப்போது மாடுகள் சண்டையிடுவதால் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஏதாவது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு முன் கால்நடைகளை ரோட்டில் விடுபவர்கள் மீது பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.