/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை நகராட்சியில் கமிஷனர் இன்றி வரி வசூலிப்பதில் பெரும் தொய்வு அலைக்கழிக்கப்படும் மக்கள்

ADDED : செப் 11, 2025 10:44 PM
கீழக்கரை; கீழக்கரை நகராட்சியில் மூன்று மாதங்களாக நிரந்தர கமிஷனர் இல்லாததால் வரி வசூலிப்பு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
கீழக்கரை நகராட்சியில் 1 முதல் 21 வார்டுகள் உள்ளன. 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இதர வரி செலுத்தும் நிலையில் அவற்றுக்கான ரசீது வழங்குவதில் மூன்று மாதங்களாக தொய்வு ஏற்படுவதாக பயனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொறுப்பு கமிஷனர் கண்ணன் தேவகோட்டையில் இருந்து கீழக்கரை நகராட்சிக்கு வருகிறார். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து செல்கிறார்.
இதனால் பல பணிகள் முறையாக செய்ய வழியின்றி ஸ்தம்பித்து உள்ளன. 1வது வார்டு கவுன்சிலர் முகம்மது பாதுஷா கூறியதாவது:
கீழக்கரை நகராட்சி பகுதியில் புதிதாக வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டதற்கு வரி ரசீதுக்கு விண்ணப்பித்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை வழங்கவில்லை. இதனால் நகராட்சிக்கு வரி இழப்பு ஏற்படுகிறது.
கூடுதல் நிதிச் சுமையும் உள்ளது. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்கள் வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதற்கு முக்கிய காரணமே நிரந்தர கமிஷனர் இல்லாதது.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் வரி வசூலிக்கவும், உடனடியாக ரசீது வழங்கி மக்களை அலைக்கழிக்காமல் இருக்க வேண்டும் என்றார்.