/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தபால் சேமிப்பு கணக்கு துவங்க மக்கள் ஆர்வம்
/
தபால் சேமிப்பு கணக்கு துவங்க மக்கள் ஆர்வம்
ADDED : செப் 19, 2024 04:31 AM
திருவாடானை: தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு துவங்க மக்கள் ஆர்வம் காட்டுவதாக தபால் அலுவலர்கள் தெரிவித்தனர்.
திருவாடானையை தலைமையிடமாகக் கொண்டு 59 கிராமப் புற தபால் நிலையங்கள்உள்ளன. கிராமப்புற தபால் நிலையங்களில் அனைத்து பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கிராம மக்கள் சேமிப்பு கணக்கு துவங்க வங்கிக்கு மாறாக தபால் அலுவலகங்களை தேர்வு செய்ய ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.
தபால் அலுவலர்கள் கூறியதாவது:
கிளை தபால் அலுவலகங்களில் விரைவு தபால், மணியார்டர் புக்கிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உள்ளன. வங்கிகள் போல் செயல்பாட்டில் உள்ளதால் சேமிப்பு கணக்கு துவங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது என்றனர்.