/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்
/
தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்
தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்
தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியால் மக்கள் அச்சம்
ADDED : ஆக 02, 2025 11:13 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி சங்கரபாண்டி ஊருணியிலிருந்து கமுதி இணைக்கும் ரோட்டில் உயரழுத்த மின்கம்பி தாழ்வாக செல்வதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் பேரூராட்சி சங்கரபாண்டி ஊருணியிலிருந்து கமுதி இணைக்கு ரோட்டில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதுகுளத்துார் துணைமின் நிலையத்திலிருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பம் வழியாக உயரழுத்து மின்கம்பி செல்கிறது.
இந்நிலையில் இவ்வழியே செல்லும் மின்கம்பி தாழ்வாக கைகளால் எட்டி தொடும் உயரத்தில் செல்கிறது. இதனால் வாகனங்களில் செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
--