/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குடிநீர் வசதியின்றி மக்கள் சிரமம்
/
காவிரி குடிநீர் வசதியின்றி மக்கள் சிரமம்
ADDED : அக் 05, 2024 03:59 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வெங்கலகுறிச்சி ஊராட்சி கீழப்பனையடியேந்தல் கிராமத்தில் காவிரி குடிநீர் வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.
கீழப்பனையடியேந்தல் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இங்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி குடிநீர் சப்ளை இல்லை. இதனால் கிராம மக்கள் வேறு வழியின்றி டிராக்டர் தண்ணீரை குடம் ரூ.15க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
அத்தியாவசிய வேலைக்கும் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். வெங்கலகுறிச்சி ஊராட்சி தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:
கீழப்பனையடியேந்தலில் 4 ஆண்டாக காவிரி குடிநீர் வரவில்லை. டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் டிராக்டருக்காக தினமும் மக்கள் காத்திருக்கின்றனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முழுமையாக கட்டணம் செலுத்திய பிறகும் குடிநீர் வழங்கவில்லை. ஊராட்சி நிர்வாகத்திற்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு தமிழக அரசு போதுமான நிதி ஒதுக்காததால் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் சிரமப்படுகிறோம்.
எனவே வெங்கலக்குறிச்சி ஊராட்சி கிராமங்களில் முறையாக காவிரி குடிநீர் வழங்கவும், அடிப்படை வசதிகள் செய்து தர கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.