/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்கள் அதிருப்தி பொங்கல் தொகுப்பில் முந்திரி, ஏலக்காய் இல்லை: வெறும் பச்சரிசி, சீனி மட்டும் போதுமா எனக்கேள்வி

ADDED : ஜன 10, 2025 04:52 AM

ஜன.14 ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் 775 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 733 அரிசி கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்கப்படுகிறது. இது போக மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் உள்ள 450 ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை ராமநாதபுரத்தில் ராம்கோ பண்டகசாலை ரேஷன் கடையில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்து கார்டுதாரர்களுக்கு வேட்டி, சேலையுடன் பொங்கல் தொகுப்பை வழங்கினார்.
இணைப்பதிவாளர் ஜீனு, துணைப்பதிவாளர்கள் முரளி கிருஷ்ணன், ராஜகுரு, மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ, தாசில்தார் சுவாமிநாதன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் பங்கேற்றனர். ஜன.13 வரை பொங்கல் தொகுப்பும், சேலைகள், வேட்டிகள் ஜன.31 வரை வழங்கப்படுகிறது என கலெக்டர் கூறினார்.
மக்கள் அதிருப்தி
இவ்வாண்டு பொங்கல் தொகுப்பிற்குரிய பை கூட இல்லாமல் கூட்டுறவு கடைகளில் ரூ.199க்கு வழங்கப்படும் துணிப் பையை சிலருக்கு மட்டும் வழங்கினர். மேலும் பொங்கல் வைக்க தேவையான வெல்லம், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, நெய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கவில்லை.
மாறாக மாதந்தோறும் வழங்கப்படும் பச்சரிசி, சீனி(சர்க்கரை) தலா ஒரு கிலோவுடன் ஒரு கரும்பு வழங்கியுள்ளனர். எப்படி பொங்கல் வைப்பது என மேலும் ரொக்கத்தொகையும் வழங்காதது ஏமாற்றத்தை தருகிறது என மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
ரொக்கம் வழங்காததால் பெரும்பாலான கடைகளில் பொங்கல் தொகுப்பு வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் ரேஷன் கடைகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.