/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு நகராட்சியில் மக்கள் முற்றுகை
/
கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு நகராட்சியில் மக்கள் முற்றுகை
கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு நகராட்சியில் மக்கள் முற்றுகை
கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு நகராட்சியில் மக்கள் முற்றுகை
ADDED : நவ 28, 2024 05:04 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி 26வது வார்டு குடியிருப்பு பகுதியில் கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
பரமக்குடியில் 26வது வார்டு காட்டுப்பரமக்குடி பூவைசிய இந்திர குல தெருவில் அங்கன்வாடி மையம் அருகில் கழிப்பறை செயல்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் கழிப்பறை உள்ள நிலையில் மீண்டும் அதே இடத்தில் கட்ட நகராட்சி அதிகாரிகள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இதையடுத்து அதிகளவில் குடியிருப்புகள் உள்ள நிலையில் மாற்று இடத்தில்சுகாதார வளாகம் அமைக்க மக்கள் வலியுறுத்தினர். இதனை வலியுறுத்தி நுாறுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 26வது வார்டு மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆணையர் முத்துச்சாமிடம் மனு அளித்தனர்.
அப்போது அங்கன்வாடி மையம் அருகில் பூங்கா அல்லது நுாலகம் அமைக்கலாம். கழிப்பறையை மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என்றனர். மேலும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதுடன் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என தெரிவித்தனர்.
நகராட்சி தலைவர் சேது கருணாநிதி கூறுகையில், கழிப்பறை கட்டடம் கட்டும் இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.