/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய்களில் சீமை கருவேலம் அகற்ற மக்கள் விண்ணப்பிக்கலாம்
/
கண்மாய்களில் சீமை கருவேலம் அகற்ற மக்கள் விண்ணப்பிக்கலாம்
கண்மாய்களில் சீமை கருவேலம் அகற்ற மக்கள் விண்ணப்பிக்கலாம்
கண்மாய்களில் சீமை கருவேலம் அகற்ற மக்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 06, 2025 11:57 PM
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர் நிலைகளில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் திட்டம் கானல் நீராகிப் போனது.
சாயல்குடி அருகே பெரியகுளம் கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாதன் கூறியதாவது:
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊராட்சி கண்மாய்களின் சீமைக் கருவேல மரங்களை அகற்ற பொது ஏலம் விடப்பட்டு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 639 கண்மாய்கள் மற்றும் 4293 ஊராட்சி கண்மாய், குளங்கள் உள்ளன.
இவற்றில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை துாரோடு முழுவதுமாக அகற்றி அப்புறப்படுத்துவதற்கு ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் https://ramanathapuram.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கடந்த ஆண்டு அக்., 6ல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சீமை கருவேல மரங்களின் தாக்கம் அதிகளவு வயல்வெளிகளிலும், கண்மாய், ஊருணி, குளம், குட்டைகளிலும் பரந்து காணப்படுகிறது. பனை மரங்கள் உள்ள பகுதிகளிலும் சீமை கருவேல மரங்களின் தாக்கத்தால் பட்டு விடுகின்றன.
குறிப்பாக கண்மாயின் வரத்துக்கால்வாய் பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் மிகுதியாக வளர்ந்து இருப்பதால் தண்ணீர் செல்வதற்கும், கண்மாயில் தேக்குவதற்கும் வழியில்லாத நிலை உள்ளது. இதனால் இத்திட்டம் கானல் நீராகவே உள்ளது.
எனவே கண்மாய் பாசன பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டு கோடை காலத்தில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அழிப்பதற்கான தகுந்த விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.