/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி கூரான்கோட்டை ரோடு தரமற்றிருப்பதாக மக்கள் புகார்
/
சாயல்குடி கூரான்கோட்டை ரோடு தரமற்றிருப்பதாக மக்கள் புகார்
சாயல்குடி கூரான்கோட்டை ரோடு தரமற்றிருப்பதாக மக்கள் புகார்
சாயல்குடி கூரான்கோட்டை ரோடு தரமற்றிருப்பதாக மக்கள் புகார்
ADDED : மே 18, 2025 10:12 PM
சாயல்குடி : சாயல்குடி அருகே கூரான்கோட்டையில் இருந்து 5 கிராமங்களுக்கு செல்லும் தார் ரோடு தரமற்றிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கூரான்கோட்டை கிராமத்திற்கு செல்லக்கூடிய ரோடு அல்லிக்குளம், வெள்ளம்பல், புதுக்குடியிருப்பு, வேடக்கரிசல்குளம், உசிலங்குளம் வழியாக 6 கி.மீ., செல்கிறது.
இந்நிலையில் ரோடு அமைத்து 15 நாட்களுக்கும் மேலாக ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு இதர வாகனங்கள் செல்ல இயலாதவாறு ரோடு ரோலர் மூலம் தடுப்பு ஏற்படுத்தி வைத்துள்ளனர். கிராம மக்கள் கூறியதாவது:
ரூ.7.45 கோடியில் 6 கி.மீ.,க்கு பிரதமரின் கிராம சாலை திட்டத்தில் பணிகள் நடந்துள்ளது. தார் ரோடு அமைத்து சில மணி நேரங்களிலேயே வாகனங்கள் செல்வது வழக்கம்.
ஆனால் இங்கு 15 நாட்களாக இதர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்டவைகள் செல்வதற்கு தடை விதிக்கின்றனர். டூவீலர்கள் மட்டுமே சாலையை கடந்து செல்கின்றன. எனவே தார் சாலையை தரமாக அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.