/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீர்நிலைகள் மறுசீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம் பெயரில் கண் துடைப்பு நாடகம் முறையான அறிவிப்பு இல்லை என மக்கள் புகார்
/
நீர்நிலைகள் மறுசீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம் பெயரில் கண் துடைப்பு நாடகம் முறையான அறிவிப்பு இல்லை என மக்கள் புகார்
நீர்நிலைகள் மறுசீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம் பெயரில் கண் துடைப்பு நாடகம் முறையான அறிவிப்பு இல்லை என மக்கள் புகார்
நீர்நிலைகள் மறுசீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம் பெயரில் கண் துடைப்பு நாடகம் முறையான அறிவிப்பு இல்லை என மக்கள் புகார்
ADDED : ஏப் 16, 2025 08:42 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி சார்பில் நீர்நிலைகள் மறுசீரமைப்பு குறித்து நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் முறையான அறிவிப்பு வெளியிட வில்லை, கண்துடைப்பு நாடகமாக கூட்டம் நடக்கிறது என மக்கள் கூச்சலிட்டனர். பல இருக்கைகள் காலியாக கிடந்தன.
தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் மற்றும் பெங்களுரூ சி.டி.டி., இந்தியா என்ற நிறுவத்துடன் இணைந்து ராமநாதபுரத்தில் 23 ஊருணிகளை மறுசீரமைப்பது, ஒன்றோடு ஒன்று இணைத்து பராமரிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இப்பணிகள் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் முன்னிலை வகித்தார். நகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். பொதுமக்கள் 10 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
கருத்து கேட்பு கூட்டம் துவங்கியதும் உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் எழுந்து முறையான அறிவிப்பு செய்திருந்தால் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து கருத்து சொல்வதற்கு பொதுமக்களும் நீர்நிலைகள் குறித்து அறிந்தவர்களும் ஏராளமானோர் வந்திருப்பார்கள்.
ஆனால் முறையான அறிவிப்பு செய்யவில்லை என குற்றம் சாட்டினர். இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தி.மு.க., கவுன்சிலர் அவர்களை அமரச்சொன்னதால் கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 23 ஊருணிகளில் உள்ளது மழைநீர் அல்ல கழிவுநீர். அதற்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் கூச்சலிட்டனர்.
வலுகட்டாயமாக வெளியேற்றம்
கருத்துக் கேட்பு கூட்டத்தில் அமைதியற்ற சூழல் ஏற்பட்டது. இந்த நிகழ்வுகளை போட்டோ, வீடியோ எடுக்கக் கூடாது என அதிகாரிகள் பத்திரிகையாளர்களை வலுகட்டாயமாக வெளியேற்றினர்.
இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த அஜ்மல் சரிப் கூறுகையில், நீர்நிலைகளை காப்பாற்றுவதாக கூறி பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் என்ற பெயரில் கண் துடைப்பு நாடகம் நடக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் கலெக்டர், தொகுதி எம்.எல்.ஏ., பங்கேற்கவில்லை.
பெயருக்கு நடத்திவிட்டு அரசு அங்கீகாரம் பெற திட்டமிட்டுள்ளனர். பொது இடங்களில் விளம்பரம் செய்து, முறையாக அறிவிப்பு செய்து கருத்து கேட்பு கூட்டத்தை கலெக்டர் தலைமையில் மீண்டும் நடத்த வேண்டும் என்றார்.

