/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வரி ரசீதில் ஊர் பெயர் மாற்றம் திருத்தம் செய்ய மக்கள் கோரிக்கை
/
வரி ரசீதில் ஊர் பெயர் மாற்றம் திருத்தம் செய்ய மக்கள் கோரிக்கை
வரி ரசீதில் ஊர் பெயர் மாற்றம் திருத்தம் செய்ய மக்கள் கோரிக்கை
வரி ரசீதில் ஊர் பெயர் மாற்றம் திருத்தம் செய்ய மக்கள் கோரிக்கை
ADDED : மார் 25, 2025 05:41 AM

ராமநாதபுரம்: ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை கிராம மக்கள் வரி ரசீதில் ஊர் பெயர் பிச்சையப்பன் என உள்ளதை சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கீழக்கரை தாலுகா பிச்சை மூப்பன் வலசை கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், எங்கள் ஊரின் பெயர் பிச்சை மூப்பன் வலசை என பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இதுவே அரசு ஆவணங்கள், பதிவேடுகளில் உள்ளது.
இந்நிலையில் 2024-25ம் ஆண்டு வீட்டு வரி ரசீது பிச்சையப்பன் வலசை என பெயர் மாறுதல் செய்துள்ளனர். இதனை திருத்தும் அதிகாரம் ஊராட்சி செயலாளரிடம் இல்லை என்கின்றனர். எனவே இவ்விஷயத்தில் கலெக்டர் தலையீட்டு ஊர் பெயரை பிச்சை மூப்பன் வலசை என திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.