/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காக்கூர் மதுபான கடையை அகற்ற மக்கள் கோரிக்கை
/
காக்கூர் மதுபான கடையை அகற்ற மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 19, 2025 07:49 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே காக்கூர் விலக்கு ரோட்டில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துார் அருகே காக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குமாரகுறிச்சி, கருமல், மருதகம், அரப்போது, ராமலிங்கபுரம், தேரிருவேலி உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி செல்வதற்கு முதுகுளத்துார்- ராமநாதபுரம் ரோடு காக்கூர் விலக்கு ரோட்டில் இருந்து பஸ்சில் செல்கின்றனர்.
உரிய நேரத்தில் பஸ்வசதி இல்லாததால் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது. காக்கூர் விலக்கு ரோட்டில் அரசு மதுபான கடை இயங்குகிறது. இதனால் இங்கு காத்திருக்கும் மாணவிகள், மக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து சென்ற மாணவர்கள் மீது டிராக்டர் மோதியதில் இரண்டு மாணவிகள் காயமடைந்தனர்.
எனவே மாணவர்களின் நலன்கருதி காக்கூர் விலக்கு ரோட்டில் மக்கள் மாணவர்கள் அதிகம் கூடும் இடமாக இருப்பதால் அங்கு இருக்கும் மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.