/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீரில் மூழ்கிய பயிர்கள், வீட்டை பாதுகாக்க கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா
/
நீரில் மூழ்கிய பயிர்கள், வீட்டை பாதுகாக்க கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா
நீரில் மூழ்கிய பயிர்கள், வீட்டை பாதுகாக்க கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா
நீரில் மூழ்கிய பயிர்கள், வீட்டை பாதுகாக்க கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா
ADDED : டிச 24, 2024 04:33 AM

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கோவிந்தமங்கலம் அருகே நரிக்கன்வயல் கிராம மக்கள் கண்மாய் உபரி நீரில் மூழ்கிய பயிர்கள், வீடுகளை மீட்க வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
நரிக்கன்வயல் கிராமத்தில் கோவிந்த மங்கலம், மூலவயல் கண்மாய்களின் தண்ணீர் மடை அடைப்பால் செல்ல வழியின்றி விவசாய நிலங்களில் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் புகுந்து விட்டது.
கண்மாய் கரையை வெட்டி விட்டு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இது தொடர்பாக 4 முறை கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனை கண்டித்து நேற்று கலெக்டர் அலுவலகம் நுழைவுப் பகுதியில் மக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது என எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
நரிக்கன்வயல் கிராமத்தில் நீரில் மூழ்கிய பயிர்கள், வீடுகளை மீட்டுத்தர வேண்டும். அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையெனில் எங்களது ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்பி ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என ஊர் மக்கள் கூறினர்.
* ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடியை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனு: டிச.12 முதல் 14 வரை பெய்த பருவம் தவறிய மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டது.
வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதற்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.