/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்ட் அருகே ஆபத்தான திறந்தவெளி குழியால் மக்கள் அச்சம்
/
பஸ் ஸ்டாண்ட் அருகே ஆபத்தான திறந்தவெளி குழியால் மக்கள் அச்சம்
பஸ் ஸ்டாண்ட் அருகே ஆபத்தான திறந்தவெளி குழியால் மக்கள் அச்சம்
பஸ் ஸ்டாண்ட் அருகே ஆபத்தான திறந்தவெளி குழியால் மக்கள் அச்சம்
ADDED : மார் 05, 2024 04:14 AM

கீழக்கரை, : கீழக்கரை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில்இருந்து அண்ணாநகர்செல்லும் வழியில் மும்முனை சந்திப்பில் ரோட்டின் நடுவே வாறுகால் பள்ளம் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக திறந்தவெளியில் உள்ள வாறுகால் பள்ளத்தால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் சாலையை கடக்கும் போது தெரியாமல் தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.
கழிவுநீர் செல்லக்கூடிய ஜங்ஷன் பாக்ஸ் வாறுகால் மூடியை தரமற்று ஒப்பந்ததாரர் அமைத்துள்ளதால் இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தரமான சிமெண்ட் மூடிகளை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.