/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவிப்பு
/
முதுகுளத்துாரில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவிப்பு
முதுகுளத்துாரில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவிப்பு
முதுகுளத்துாரில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 30, 2025 04:11 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் நீதிமன்றம் அருகே உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.
முதுகுளத்துார் கடலாடி ரோடு நீதிமன்றம் அருகே 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியில் வீடு கட்ட திட்ட அனுமதி பெற்று பெரும்பாலான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பேரூராட்சி சார்பில் இப்பகுதிக்கு குடிநீர், ரோடு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை.
தற்போது வரை மக்கள் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி குடிப்பதற்கும், அத்தியாவசிய தேவைக்கும் பயன்படுத்துகின்றனர். மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்குவதால் நடந்து செல்வதற்கே மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில மாதத்திற்கு முன்பு இப்பகுதிக்கு தண்ணீர் வழங்கப்படுவதற்காக போர்வெல் அமைக்கப்பட்டும் குழாய் பதிக்கப்படாமல் எந்த பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அரசின் நிதியும் வீணடிக்கப்படுகிறது.
முறையாக அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.