/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்த சாலையால் சாத்தங்குடி மக்கள் அவதி
/
சேதமடைந்த சாலையால் சாத்தங்குடி மக்கள் அவதி
ADDED : நவ 25, 2024 06:23 AM

கடலாடி : கடலாடி அருகே சாத்தங்குடி - வெள்ளாங்குளம் செல்லும் ஒரு கி.மீ., தொலைவிற்கான சாலை சேதமடைந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
கடந்த 12 ஆண்டுக்கு முன்பு சாத்தங்குடி - வெள்ளாங்குளம் அமைக்கப்பட்ட தார் சாலை 5 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சாத்தங்குடி, வெள்ளாங்குளம் செல்வதற்குரிய ஒரு கி.மீ., சாலை சேதமடைந்துள்ளதால் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறோம்.
எனவே கடலாடி யூனியன் கூட்டத்தில் இச்சாலையை சீரமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றி புதிய சாலை அமைக்க முன்வர வேண்டும் என மக்கள வலியுறுத்தினர்.