/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொடர் மின்தடையால் வேந்தோணி மக்கள் வேதனை
/
தொடர் மின்தடையால் வேந்தோணி மக்கள் வேதனை
ADDED : நவ 24, 2025 05:46 AM
பரமக்குடி: பரமக்குடி அருகே வேந்தோணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொடர் மின்தடை ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்
பரமக்குடி நகராட்சி எல்லை வேந்தோணி ரோடு, ரயில்வே டிராக் துவங்கி குமரக்குடி வரை நீடிக்கிறது. இப்பகுதியில் கூலி தொழிலாளர்கள், நெசவாளர்கள் என ஏராளமானோர் வசிக்கின்றனர். இங்கு நெசவுத் தொழிலில் ஈடுபடுவோருக்கு மின்சாரம் முக்கிய தேவையாக உள்ளது.
இந்நிலையில் தினமும் மணிக்கணக்கில் மின்தடை ஏற்படுவதால் வீட்டு வேலைகளை முடித்து நேரத்திற்கு பணிக்குச் செல்ல முடியாமல் உள்ளனர். இச்சூழலில் மதுரை, பரமக்குடி நான்கு வழிச்சாலை குறுக்கிடும் நிலையில் அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகரித் துள்ளது.
காலை, இரவு என மின்தடை ஏற்படும் நிலையில் மின்வாரியத்திடமிருந்து முறையான பதில் கிடைக்க வில்லை.
மின்வாரிய ஊழியர்கள் போதிய டிரான்ஸ்பார்மர்களை அமைப்பதுடன், மின் வயர்கள் செல்லும் பகுதியில் மரக்கிளைகளை வெட்ட வேண்டும்.
தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

