/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விளைச்சல் நிலம் அருகே குப்பை கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு
/
விளைச்சல் நிலம் அருகே குப்பை கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு
விளைச்சல் நிலம் அருகே குப்பை கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு
விளைச்சல் நிலம் அருகே குப்பை கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 25, 2025 02:31 AM
ராமநாதபுரம், : ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் கடலுார் ஊராட்சியில் உப்பூரில்விளைச்சல் நிலங்கள், சந்தைத்திடல் அருகே திடக்கழிவு சுத்தி கரிப்பு திட்டத்தில் குப்பை கிடங்கு அமைக்க கூடாது எனஅப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
உப்பூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் ராமநாத புரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.
இதில் கடலுார் ஊராட்சியில் விவசாயம், மீன்பிடி தொழில் பிரதானமாகஉள்ளது.
இந்நிலையில் உப்பூரில் சுற்றியுள்ள விளைச்சல் நிலங்கள்உள்ள பகுதியில் சந்தை நடைபெறும் இடம் அருகே புதிதாகஊராட்சி சார்பில் திடக்கழிவு சுத்திகரிப்பு நிலையம்அமைக்கப்பட்டால் விளைநிலங்கள் பாதிக்கப்படும்.
சந்தைவியாபாரிகள், மக்கள் துர்நாற்றத்தால் சிரமப்படுவார்கள்.
எனவே வேறு இடத்தில் திடக்கழிவு சுத்திகரிப்பு திட்டத்தில் குப்பை கிடங்குஅமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.