/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திரவுபதி அம்மன் கோயில் தெரு வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு
/
திரவுபதி அம்மன் கோயில் தெரு வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு
திரவுபதி அம்மன் கோயில் தெரு வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு
திரவுபதி அம்மன் கோயில் தெரு வீடுகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு
ADDED : மே 27, 2025 12:48 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிபட்டணம் திரவுபதி அம்மன் கோயில் தெருவில் நீர்நிலை ஆக்கிமிரப்பு இல்லாத வீடுகளை அகற்றக் கூடாது என அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் வெளிபட்டணம் திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், திரவுபதி அம்மன் கோயில் தெருவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கிறோம். தற்போது ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம்.
அதே சமயம் நீர்நிலையில் இல்லாத வீடுகளையும் காலி செய்யக் கூறி சிலரது துாண்டுதல் பேரில் வருவாய்துறையினர் மிரட்டுகின்றனர்.
மேலும் மே 31க்குள் காலி செய்ய நோட்டீஸ் அளித்துள்ளனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அதுவரை எங்களுக்கு காலஅவகாசம் வழங்கிட வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு இல்லாத இடத்தில் உள்ள வீடுகளை அகற்றக் கூடாது என மனு அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் தாசில்தார் ரவி கூறுகையில், திரவுபதி அம்மன் கோயில் தெருவில் யாரையும் மிரட்டவில்லை. தவறான தகவலை கூறுகின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கியுள்ளோம். எல்லாமே சட்டப்படிதான் நடக்கிறது என்றார்.