/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காக்குடி கண்மாயில் குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு: அகற்ற வலியுறுத்தல்

ADDED : ஜூலை 01, 2025 02:30 AM

ராமநாதபுரம்': கமுதி தாலுகா காக்குடி கண்மாயில் பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை கண்டித்தும், உடன் அகற்றி சுத்தம் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
காக்குடி, வலையமணக்குளம் கிராமத்தை சேர்ந்த 50க்கு மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்துள்ளனர். அதில், கமுதி பேரூராட்சியின் குப்பையை மொத்தமாக காக்குடி கண்மாயில் கொட்டுகின்றனர். இதனால் தண்ணீர் மாசுடைந்துள்ளது. அருகேயுள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சுகாதாரக்கேட்டால் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக குப்பையை பேரூராட்சி நிர்வாகம் அகற்றிட வேண்டும். மீண்டும் கொட்டாமல் இருக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.