/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அலைபேசி டவர் அமைக்க கூடாது மணல் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு ரோடு வசதியின்றி அவதி
/
அலைபேசி டவர் அமைக்க கூடாது மணல் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு ரோடு வசதியின்றி அவதி
அலைபேசி டவர் அமைக்க கூடாது மணல் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு ரோடு வசதியின்றி அவதி
அலைபேசி டவர் அமைக்க கூடாது மணல் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு ரோடு வசதியின்றி அவதி
ADDED : ஆக 12, 2025 11:08 PM

ராமநாதபுரம்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ராமநாதபுரம் வெளிபட்டணத்தில் அலைபேசி டவர் அமைக்க கூடாது. கமுதி அருகே மண்டலமாணிக்கம் குரூப் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் வெளிபட்டணம் மோர்கடை தெருவை சேர்ந்த பொதுமக்கள் மனுவில் கூறியிருப்பதாவது:
மோர்கடை தெருவில் 500 குடும்பங்கள் வசிக்கின்றனர். பள்ளி குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களை பாதிக்கும் கதிர்வீச்சுகளால் தீங்கும் விளைவிக்கும் அலைபேசி டவர் ஒருவரது பழைய வீட்டில் வைக்க உள்ளனர். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
கமுதி தாலுகா மண்டலமாணிக்கம் அருகேயுள்ள புதுக்குளம் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள குண்டாற்றில் குவாரி அமைத்து ஆற்று மணல் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை திரும்ப பெற வேண்டும்.
மணல் எடுப்பதால் நீர்ஊற்று பாதிக்கும், விவசாயிகள், மக்களின் தண்ணீர் தேவைக்கு சிரமம் ஏற்படும். எனவே இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
ரோடு வசதியின்றி அவதி இதே போன்று கடலாடி ஓரிவயல் கிராமம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
அதில், கிராமத்தில் அனைத்து இடங்களிலும் பேவர் பிளாக் கற்கள் பதித்து ரோடு அமைக்கின்றனர். ஆதிதிராவிடர் காலனியை மட்டும் சிலரது துண்டுதலின் பேரில் புறக்கணித்துள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து புதிதாக பேவர் பிளாக் ரோடு அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஓம்சக்திநகரில் ரோஸ்நகர் மக்கள் மனுவில் கூறியுள்ளதாவது: ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் மழைநீர் நிரந்தரமாக தேங்குகிறது.
அவசரத்திற்கு ஆட்டோ, பால்வண்டி கூட வர மறுக்கின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகத்தினர்ரோடு வசதி செய்துத்தர வேண்டும் என வலியுறுத்தினர்.

