/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய்க்கு தண்ணீர் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா

ADDED : டிச 10, 2024 05:03 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கடம்பூர் கிராம மக்கள் தங்கள் கண்மாய்க்கு தண்ணீரை வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் அருகே கடம்பூர் கிராம மக்கள் தங்கள் கிராம கண்மாய்க்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி டிச.2 ல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன் பிறகும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து நேற்று கடம்பூர் மக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடம்பூர் கால்வாயில் இருந்து வரும் தண்ணீரை சிறுவயல் கிராம பொதுமக்கள் கால்வாய் அமைத்து கொண்டு சென்று விட்டனர். இதனால் கடம்பூர் கண்மாய்க்கு தண்ணீர் வரத்தின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் தண்ணீர் விடவில்லை.
எனவே கடம்பூர் கண்மாய்க்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மீண்டும் கோரிக்கை மனு அளித்தனர்.
கண்மாய்க்கு தண்ணீர் வழங்கவில்லை என்றால் மீண்டும் போராட உள்ளதாக மக்கள் கூறினர்.