/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்றுப் பாதையின்றி ரோட்டின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியால் மக்கள் அவதி

ADDED : அக் 14, 2024 05:25 AM

ஆர்.எஸ்.மங்கலம், : இளையான்குடி ரோடு செங்குடி விலக்கில் இருந்து எட்டியத்திடல் வழியாக முத்துப்பட்டினம் செல்லும் ரோட்டில் முறையான மாற்றுப் பாதை அமைக்காமல் பாலம் கட்டுமானப் பணி நடப்பதால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே முத்துபட்டினத்தில் உள்ள புனித வனத்து அந்தோணியார் சர்ச்சிற்கு தினமும் வெளியூர்களில் ஏராளமானோர் வருகின்றனர்.
இந்நிலையில் இளையான்குடி ரோட்டில் செங்குடி பகுதி முத்துப்பட்டினம் விலக்கு ரோட்டின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடக்கிறது.
அப்பகுதியில் வாகனங்களும், பொதுமக்களும் செல்வதற்கு மாற்றுப் பாதை முறையாக அமைக்கவில்லை. இதனால் எட்டியத்திடல், முத்துப்பட்டினம், சேத்திடல், சீனாங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி கிராமங்களுக்கு செல்லும் மக்களும், முத்துப்பட்டினம் சர்ச் செல்லும் வெளியூர் பயணிகளும் 10 நாட்களாக சிரமப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாற்றுப் பாதையை சீரமைத்து தர வேண்டும்.