/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிருஷ்ணாபுரத்தில் தொடர் மின்தடையால் மக்கள் அவதி
/
கிருஷ்ணாபுரத்தில் தொடர் மின்தடையால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 12, 2025 11:09 PM

சாயல்குடி; சாயல்குடி அருகே எம்.கிருஷ்ணாபுரத்தில் தொடர் மின்தடையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சி எம்.கிருஷ்ணாபுரத்தில் சாலையோர மரங்கள் மற்றும் சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் உயர்மின் கம்பிகளில் பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் கூறியதாவது:
சாயல்குடி துணை மின் நிலையத்தில் இருந்து இப்பகுதியில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் அருகே ஏராளமான முள் மரங்கள் வளர்ந்துள்ளன. மின் கம்பி செல்லும் வழித்தடங்கள் முழுவதும் ஏராளமான மரங்கள் காற்றின் தாக்கத்தால் அப்பகுதியில் மின்தடையை ஏற்படுத்துகிறது.
எனவே மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்திற்கு இடையூறாக இருக்கும் முள் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் முறையாக மின்சப்ளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.