/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணிக்கு இரவு நேரத்தில் வராத அரசு பஸ்களால் மக்கள் அவதி
/
திருப்புல்லாணிக்கு இரவு நேரத்தில் வராத அரசு பஸ்களால் மக்கள் அவதி
திருப்புல்லாணிக்கு இரவு நேரத்தில் வராத அரசு பஸ்களால் மக்கள் அவதி
திருப்புல்லாணிக்கு இரவு நேரத்தில் வராத அரசு பஸ்களால் மக்கள் அவதி
ADDED : மார் 17, 2025 08:07 AM
திருப்புல்லாணி : திருப்புல்லாணி நகர் பகுதிக்குள் இரவு 8:00 மணிக்கு மேல் டவுன் பஸ்கள் வராமல், அப்படியே கிழக்கு கடற்கரை சாலையின் வழியாக பயணிப்பதால் ஒரு கி.மீ., தொலைவிற்கு பயணிகள் நடந்து சென்று மக்கள் சிரம்படுகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ளது திருப்புல்லாணி. கீழக்கரையில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள திருப்புல்லாணி நகர் பகுதிக்குள் இரவு 8:00 மணிக்கு மேல் டவுன் பஸ்கள் வராமல் அப்படியே கிழக்கு கடற்கரை சாலையின் வழியாக பயணிப்பதால் ஒரு கி.மீ., தொலைவிற்கு பயணிகள் நடந்து செல்கின்றனர்.
திருப்புல்லாணி செல்வதற்காக கீழக்கரை அரசு டவுன் பஸ்ஸில் ஏறினால் இரவு 8:00 மணிக்கு மேல் திருப்புல்லாணி நகர் பகுதிகளுக்குள் செல்லாமல் கிழக்கு கடற்கரை சாலை பொக்கனாரேந்தல் பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு செல்லும் நிலை தொடர்கிறது.
இதனால் ஒரு கி.மீ., தொலைவிற்கு நடந்து செல்ல பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பயணிகளுக்கும், கண்டக்டருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே ராமநாதபுரம் போக்குவரத்து கழக அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.