/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் கனரக வாகனங்களால் பொதுமக்கள் அவதி

ADDED : ஜன 25, 2024 04:54 AM
கீழக்கரை: கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து மன்னார் வளைகுடா கடற்கரை சாலை வரை செல்லக்கூடிய பகுதிகளில் டிப்பர் லாரி, குடிநீர் டேங்கர் லாரி உள்ளிட்ட பெரிய கனரக வாகனங்கள் செல்வதால் சிரமத்தை சந்திக்கின்றனர்.
காலை 8:00 முதல் 10:00 மணி வரையிலும், மாலை 4:30 முதல் 6:30 மணி வரையிலும் இதுபோன்ற தண்ணீர் லாரி, கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் செல்வதால் பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தொடர் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பிரதான சாலைகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளும் இதற்கு காரணமாக உள்ளது.
எனவே குறிப்பிட்ட நேர இடைவெளியில் கனரக வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். பள்ளி கல்லுாரி நேரங்களில் செல்லும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகமும் போலீசாரும் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.