/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் மின்சாரம் துண்டிப்பு மக்கள் அவதி
/
ராமேஸ்வரத்தில் மின்சாரம் துண்டிப்பு மக்கள் அவதி
ADDED : டிச 01, 2025 12:58 AM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இரு நாட்களாக பெய்த கனமழையால் ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இரு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.
டிட்வா புயலால் ராமேஸ்வரத்தில் இரு நாட்களாக சூறாவளி காற்று வீசி கனமழை பெய்தது. ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் ஏராளமான வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. ராமேஸ்வரம் புதுரோடு நடராஜபுரம், கரையூர், இந்திரா நகர், மாந்தோப்பு, காந்திநகர், அண்ணாநகர் பகுதியில் பல வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாமலும், உணவு சமைக்க முடியாமலும் அவதியுற்றனர்.
ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான் தலைமையில் ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ராஜகோபால் தெருவில் மின்கம்பம் மீது மரம் விழுந்ததால், இரு நாட்களாக அப்துல்கலாம் நகர், ராஜகோபால் நகர், பெரிய பள்ளிவாசல் தெருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நேற்று புதிய மின்கம்பம் பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இரு நாட்களுக்குப் பின் நேற்று ராமேஸ்வரம் பகுதியில் மழை இன்றி வெயில் முகம் காட்டியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

