/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிளாஸ்டிக் குப்பைக்கு தீ வைப்பு மூச்சு திணறலால் மக்கள் பாதிப்பு
/
பிளாஸ்டிக் குப்பைக்கு தீ வைப்பு மூச்சு திணறலால் மக்கள் பாதிப்பு
பிளாஸ்டிக் குப்பைக்கு தீ வைப்பு மூச்சு திணறலால் மக்கள் பாதிப்பு
பிளாஸ்டிக் குப்பைக்கு தீ வைப்பு மூச்சு திணறலால் மக்கள் பாதிப்பு
ADDED : நவ 21, 2025 04:46 AM

பரமக்குடி: பரமக்குடியில் ஆங்காங்கே கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைக்கு தீ வைக்கும் போக்கால் மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிக்கப் படுகின்றனர்.
பரமக்குடி நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளமாக உள்ளது. டீக்கடைகள், ஓட்டல் உணவுகளில் துவங்கி அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் கடைகளில் பயன்படுத்துகின்றனர்.
குப்பை நகர் முழுவதும் சிதறி கிடப்பதுடன், நீர் நிலைகளை ஆக்கிரமித்து சுற்றுச்சூழலுக்கு எமனாகி வருகிறது. இந்நிலையில் வைகை ஆறு துவங்கி முக்கிய சந்திப்பு பகுதிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைக்கு அவ்வப்போது தீ வைக்கின்றனர்.
இதனால் ஒட்டுமொத்த நகரும் புகை மண்டலத்தில் சிக்கி குழந்தைகள் முதல் முதியவர்கள், நோயாளிகள் என மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர்.
ஆகவே பிளாஸ்டிக் குப்பையை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் விழிப்புடன் செயல்பட்டு தங்களுக்கான உணவுகளை சுகாதாரமான முறையில் வாங்கிச் செல்லும் வகையில் உறுதி ஏற்க வேண்டும்.
தொடர்ந்து உணவு பாதுகாப்பு, நகராட்சி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் குப்பையை முறையாக சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

