/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆதார் சேவை மையத்தில் காத்திருந்து மக்கள் அவதி
/
ஆதார் சேவை மையத்தில் காத்திருந்து மக்கள் அவதி
ADDED : பிப் 04, 2024 11:28 PM
கீழக்கரை : கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஆதார் சேவை மையத்தில் சர்வர் பழுது, போதிய பணியாளர் இல்லாததால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
கீழக்கரை நகராட்சியில் அலுவலகம் அருகே பழமை வாய்ந்த சேதமடைந்த ஓட்டு கட்டடத்தில் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. தினமும் 40 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதனால் முதியோர் , தாய்மார்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு நீண்ட நேரம் மரத்தடி நிழலில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
மேலும் சேதமடைந்த ஓட்டு கட்டடத்தில் மழைக்காலங்களிலும் ஆவணங்கள் பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
ஒருவர் மட்டுமே பணிபுரிவதால் போட்டோ எடுக்க 15 நிமிடம் வரை ஆகிறது. சில நேரங்களில் இன்டர்நெட் சேவை குறைபாடு உள்ளது.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் சேதமடைந்த கட்டடத்தை சீரமைக்கவும், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

